பிக்பாஸ் ஆரியுடன் நடிகை லட்சுமி மேனன் !

பிக்பாஸ் ஆரியுடன் நடிகை லட்சுமி மேனன் !

நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து நடிக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன். 
Published on

நெடுஞ்சாலை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆரி. பின்னர் பிக்பாஸில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். 

பிக்பாஸ் பிரபலம் ஆரி 2020இல் தனது பெயரை ஆரி அர்ஜுனன் என்று மாற்றியிருப்பதாக தெரிவித்திருந்தார். 

உதயநிதியுடன் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சேரனின் பயணங்கள் எனும் இணையத் தொடர் வெற்றி பெற்ற பிறகு புதிய படத்தில் நடிகை லக்‌ஷ்மி மேனனுடன் இணைந்துள்ளார். 

நடிகை லட்சுமி மேனன் இறுதியாக நடித்த சந்திரமுகி 2 மோசமான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

தனது சமூக வலைதள பக்கத்தில், “சேரன் பயணங்கள் வெற்றிக்குப் பிறகு லக்‌ஷ்மி மேனனுடன் இணைந்துள்ளேன். மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிட் தயாரிக்கும் முதல் படம். இயக்குநர் ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார். உங்களது அன்பினையும் ஆதரவினையும் வேண்டிக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com