ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி  மெர்லின்.
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி  மெர்லின்.

பணிப்பெண்ணுக்கு கொடுமை: எம்எல்ஏ மகன், மருமகளுக்கு காவல் நீட்டிப்பு

பணிப்பெண்ணுக்கு கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

பணிப்பெண்ணுக்கு கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மகன், மருமகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆகியோரின் நீதிமன்றக் காவல் பிப். 23 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் காணொலி மூலம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆகியோர் ஆஜரான நிலையில் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மொ்லினா ஆகியோரை சென்னை நீலாங்கரை அனைத்து மகளிா் போலீஸாா் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனா்.

இருவரும் வரும் பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் இருந்தனர்.

இந்தநிலையில், திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆகியோரின் நீதிமன்றக் காவல் பிப். 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com