சிவகார்த்திகேயன் - 23 படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் - 23 படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுது.

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் நாயகியாக சப்தசாகரச்ச எல்லோ படத்தில் நடித்த ருக்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com