கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது!

உருது கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் குல்சார்.
கவிஞர் குல்சார்.

உருது கவிஞர், பாடலாசிரியர் குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகக் கருதப்படுபவர் குல்சார். பஞ்சாபில் பிறந்த குல்சார் மிகச்சிறந்த கவிஞராகவும் பாடலாசிரியராகவும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றவர்.

சலீல் சௌத்ரி, விஷால் பரத்வாஜ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

சிறந்த திரைக்கதை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த இயக்குநர் பிரிவுகளுக்காக 5 முறை தேசிய விருது வென்றவர். 2002-ல் சாகித்ய அகாதெமி விருதும் 2013-ல் தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றார்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதும் குல்சாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com