பெர்லினில் கொட்டுக்காளி திரையிடல் - விடியோ

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடப்பட்டது.
பெர்லினில் கொட்டுக்காளி திரையிடல் - விடியோ
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'.

நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடக்காக கொட்டுக்காளி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்.16) இப்படம் திரைவிழாவில் திரையிடப்பட்டது. இதில், நடிகர் சூரி, இயக்குநர் வினோத் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபெற்றனர்.

படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதன் விடியோவை சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் கொட்டுக்காளி என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்லினில் கொட்டுக்காளி திரையிடல் - விடியோ
மூன்றாம் பிறை - 42 ஆண்டுகள் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com