தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்!
Published on
Updated on
3 min read

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள தொடர்களின் பட்டியல் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

10வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் ஆனந்த ராகம் தொடர் உள்ளது. இந்தத் தொடர் பெற்றுள்ள டிஆர்பி 6.23. அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தத் தொடரில் நாயகியாக நடிகை அனுஷா பிரதாப் நடிக்கிறார். ஆனந்த ராகம் தொடரில் அனுஷாவுக்கு அடிக்கடி சண்டைக் காட்சிகள் இருப்பதால், அதிரடி நாயகி என்ற பெயரையும் அனுஷா பெற்றுள்ளார்.

9வது இடத்தில் ஆஹா கல்யாணம் தொடர் உள்ளது. இந்தத் தொடரில் மெளனிகா, விக்ரம் ஸ்ரீ முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தொடர் 7.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

dot com

8வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. இந்தத் தொடர் ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் 7.57 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

7வது இடத்தில் இனியா தொடர் உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில் ஆல்யா மானசா நாயகியாக நடிக்கிறார். முன்பு இருந்ததைப் போன்ற முற்போக்கு கருத்துகள் அடங்கிய காட்சிகள் தற்போது குறைந்ததே டிஆர்பி சரிவுக்கு காரணம் எனலாம். இத்தொடர் 7.94 புள்ளிகளைப் பெற்றுள்ளது

6வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ். குமரன் இத்தொடரை இயக்குகிறார். வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்தொடர் 8.27 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

5வது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி தொடர் உள்ளது. சுந்தரி தொடரின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் 8.65 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

4வது இடத்தில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. இந்தத் தொடர் 8.75 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு முழுக்க டிஆர்பியில் தொடர்ந்து முதலிடத்தில் எதிர்நீச்சல் தொடர் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

dot com

3வது இடத்தில் வானத்தைப் போல தொடர் உள்ளது. திருமணத்துக்குப் பிறகான அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. தமன் குமார், ஸ்வேதா அண்ணன் தங்கையாக நடிக்கின்றனர். இத்தொடர் 9.80 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

2வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. இந்தத் தொடர் 10.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எதிர்நீச்சலுக்கு அடுத்தபடியாக அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தது கயல்தான். நடிகை சைத்ரா ரெட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

dot com

முதலிடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. இந்தத் தொடர் அறிமுகமானதிலிருந்தே தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. நடிகை மணீஷா மகேஷ் இந்தத் தொடரில் நாயகியாக நடிக்கிறார். சிங்கப் பெண்ணே தொடர் 11.44 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com