என்னதான் வாரந்தோறும் திரையரங்குகளில் படங்கள் வெளியானாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படம் பிப். 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகை ஹன்சிகா பிரதான வேடத்தில் நடித்து கடந்தாண்டு வெளியான மை நேம் இஸ் சுருதி என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ரவிதேஜா நடிப்பில் வெளியான ஈகிள் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், பூட்கட் பாலராஜு திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் வெளியாகிவுள்ளது.
மேலும் கீதானந்த், நேஹா நடிப்பில் வெளியான கேம் ஆன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.