தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சேரனின் வெப் தொடர்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சேரன் இயக்கியுள்ள சேரன்ஸ் ஜர்னி என்ற வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:39 am

சேரன் இயக்கியுள்ள சேரன்ஸ் ஜர்னி என்ற வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இயக்குநருமான சேரன், கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பின்னர், இவர் பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அறிமுகமானார்.

தொடர்ந்து இவர் பொற்காலம், ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். கடந்த 2019-ல் வெளியான திருமணம் என்ற திரைப்படத்தை இவர் கடைசியாக இயக்கி இருந்தார். 

இந்த நிலையில், சேரன் ஓடிடி தளத்திற்காக வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.  'சேரன்ஸ் ஜர்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடர் ஜனவரி 12 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இத்தொடரின் டிரைலரும் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு வேலைக்கு போட்டியிடும் 5 நபர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்கள். மேலும் ஆடுகளம் நரேன், மறைந்த நடிகர் மாரிமுத்து, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.