இலக்கியா தொடரில் ஹீரோயினுக்கு பதிலாக நடிக்கும் டிவி தொகுப்பாளர்!

இலக்கியா தொடரில் நாயகி ஹிமா பிந்துவுக்கு பதிலாக நடிகை சாம்பவி முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 
இலக்கியா தொடரில் ஹீரோயினுக்கு பதிலாக நடிக்கும் டிவி தொகுப்பாளர்!
Published on
Updated on
2 min read

இலக்கியா தொடரில் நாயகி ஹிமா பிந்துவுக்கு பதிலாக நடிகை சாம்பவி முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

நடிகை சாம்பவி கண்மணி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இலக்கியா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில், சித்தி 2  தொடரில் நடித்த நந்தன் லோகநாதன், ஹிமா பிந்து, ரூப ஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'இதயத்தை திருடாதே' தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹிமா பிந்து.

ஹிமா பிந்து
ஹிமா பிந்து

சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மதிய நேர தொடரில் நடித்துவந்தாலும், இவருடைய ரசிகர்களால் சமூக வலைதளத்தில் இலக்கியா தொடர் குறித்த விடியோக்கள் அடிக்கடி பகிரப்படுவது வழக்கம். 

இந்நிலையில், இலக்கியா தொடரிலிந்து விலகுவதாக அறிவித்து தனது ரசிகரகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளார் ஹிமா பிந்து.

தொடரிலிருந்து விலகுவதற்கான காரணத்தையும் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதில், சினிமாவையும் சீரியலையும் சரியாக பேலன்ஸ் செய்ய முடியவில்லை என்ற காரணத்தால் சீரியலிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

சாம்பவி குருமூர்த்தி
சாம்பவி குருமூர்த்தி

இதனிடையே நடிகை ஹிமா பிந்துவுக்கு பதிலாக, சாம்பவி குருமூர்த்தி நாயகியாக நடிக்கவுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய சாம்பவி, கண்மணி தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார். 

தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலக்கியா தொடரிலும் நாயகியாக நடிக்கவுள்ளார். இதனால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com