அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சேப்டர்-1 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார். தற்போது, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாகவும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஜன.12ஆம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய் நடிப்பில், இறுதியாக வெளியான யானை, சினம் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை.
அதனால் ஜன.12 ஆம் தேதி வெளியாகவுள்ள மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


