தந்தை, மகன் இருவருக்கும் பிறந்தநாள்: ஏ.ஆர்.ரஹ்மான் மகன் கூறியது என்ன தெரியுமா?

தந்தை, மகன் இருவருக்கும் பிறந்தநாள்: ஏ.ஆர்.ரஹ்மான் மகன் கூறியது என்ன தெரியுமா?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அவரது  பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார். 
Published on

தமிழ்த் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி  இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இன்று ரஹ்மானுக்கு (57) மட்டுமல்ல அவரது மகன் ஏ.ஆர். அமீனுக்கும் (21) பிறந்தநாள். பிரபலங்கள் பலரும் இருவருக்கு வாழ்த்துகள் கூறி வருகிறார்கள். 

மகன் தந்தைக்கு கூறியது என்ன தெரியுமா? 

“அப்பா, உங்களது வியக்கத்தக்க ஞானத்தை இத்தனை ஆண்டுகளாக எனக்கு பகிர்ந்து வந்ததுக்காக இந்த சிறப்பான நாளில் எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பும் வழிகாட்டுதலும்தான் எனக்கு உலகம் போன்றது. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. இன்னும் பல ஆண்டுகள் என்னுடைய வாழ்க்கையில் உங்களது அருகாமை இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அயலான் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com