
காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தாலும் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன.
இதையும் படிக்க: நாளைய நாயகிகள்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அசத்தும் பெண்கள்!
தீராக் காதல் படத்தில் அவரது நடிப்புக்கு மிகவும் நல்ல வரவேற்பினை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துவாரகா தயாரிப்பு நிறுவனம் சார்பாக ப்ளேஜ் கண்ணன் தயாரிப்பில் ஆர்.சவரி முத்து இயக்கத்தில் சிஸ்டர் படத்தின் தலைப்பு அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: வைரலாகும் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம்!
இந்தப் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி , சந்தான பாரதி, பக்ஸ், மாறன், கராத்தே கார்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.
மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் ஆகிய படங்களிலும் சுழல் 2 இணையத் தொடரிலும் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.