ஹிட்ச்காக் காலத்துக்கு அழைத்துச்சென்ற மெரி கிறிஸ்துமஸ் இயக்குநர்: விக்னேஷ் சிவன் பாராட்டு!

ஹிட்ச்காக் காலத்துக்கு அழைத்துச்சென்ற மெரி கிறிஸ்துமஸ் இயக்குநர்: விக்னேஷ் சிவன் பாராட்டு!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மெரி கிறிஸ்துமஸ் படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளார். 
Published on

'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது. இப்படம் பொங்கல் வெளியீடாக 2024, ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “விஜய் சேதுபதி-கத்ரீனாவின் நடிப்பை பார்த்து பிரமித்தேன். அழகான த்ரில்லராக எழுதப்பட்ட இந்தப் படத்தில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் நம்மை ஹிட்ச்காக் காலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரிதமின் இசை படத்துக்கு முக்கியமான தூணாக இருக்கிறது. கடைசி 30 நிமிடம் மிகவும் நன்றாக இருக்கிறது. திரையரங்குகளில் ஜன.12-இல் கண்டுகளியுங்கள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நினைத்து பெருமையாக இருக்கிறது. மெனக்கெடாமலே எளிதாக அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார். 

தமிழில் அயலான், கேப்டன் மில்லர் ஆகிய பெரிய படங்களுக்கு மத்தியில் மெரி கிறிஸ்துமஸ் படத்துக்கு குறைவான எண்ணிக்க்கையிலேயே தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஹிட்ச்காக் 
ஹிட்ச்காக் 

பிரபல இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக் த்ரில்லர் படங்களுக்கு பெயர்போனவர். அவரை சினிமா விமர்சகர்கள் த்ரில்லர் மன்னன் என்றழைப்பார்கள். மெரி கிறிஸ்துமஸ் இயக்குநரும் அவரது ரசிகன் என பல நேர்காணல்களில் கூறியுள்ளார். 

ஸ்ரீராம் ராகவன்
ஸ்ரீராம் ராகவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com