தக் லைஃப் படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை!

தக் லைஃப் படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தக் லைஃப் படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் பட நடிகை!

தக் லைஃப் படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

தக் லைஃப் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com