10 கோடி நிமிட பார்வைகளைக் கடந்த கூச முனுசாமி வீரப்பன்!

வீரப்பன் குறித்த ஆவணப்படமான ‘கூச  முனுசாமி வீரப்பன்’ ஓடிடியில் 100 மில்லியன் நிமிட பார்வைகளைக் கடந்துள்ளது.
10 கோடி நிமிட பார்வைகளைக் கடந்த கூச முனுசாமி வீரப்பன்!

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது.

வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது.

ஆர்.வி.பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம்  டிச.14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி பரபலான கவனத்தைப் பெற்றதுடன் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

காரணம், இதுவரை வெளியாகாத வீரப்பன் நேர்காணல் விடியோக்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இத்தொடர் ஜீ5 தளத்தில் இதுவரை 10 கோடி(100 மில்லியன்) நிமிடங்கள் பார்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொடர் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், வீரப்பனை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தொடர்பாக ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன் (The Hunt For Veerappan)’ ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com