
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். சிந்துசமவெளி படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், மைனா திரைப்படத்தின் மூலம் பலரால் அறியப்பட்டவர். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார். பின்னர், ஜகத் தேசாய் என்பவரை அமலா பால் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இறுதியாக, அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, 'கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. சமீபத்தில் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நடிகை அமலா பால் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்களுக்கு தெரியுமா? கருவுற்ற நேரத்தில் ஒரு ஆணின் வயிறு அவரது மனைவியின் வயிற்றை விட அதிகமாக வளரும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கட்டுக்கதைகளை நீக்குவதற்கான நேரம் - இது "அவள் கர்ப்பமாக இருக்கிறாள்" என்பது மட்டுமல்ல, "நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்! மன்னிக்கவும் கணவரே" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.