பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை? வைரலாகும் சமந்தாவின் பதிவு!
பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை என்ற சமந்தாவின் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தார்.
மேலும், அவர் தன்னுடைய உடல் நிலை குறித்து அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதையும் படிக்க: சூர்யா - 43 படத்தில் ஸ்ரீதேவியின் மகள்!
இந்நிலையில், நடிகை சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சில அழகான விஷயங்களை பார்த்தால் நம் மனத்துக்குள் கலவையான எண்ணங்கள் தோன்றும். அதற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமானது. பூக்கள் என்றால் யாருக்கு ஒவ்வாமை?" எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.