அயலான் ஓடிடியில் எப்போது?

அயலான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அயலான் ஓடிடியில் எப்போது?

அயலான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.

கடந்த 4 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம், விஎஃப்எக்ஸ் பணிகளை நம்பியே உருவாக்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான அயலான்  உலகளவில்  ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், அயலான் திரைப்படம் வரும் பிப். 16 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com