’அஸ்ஸலாமு அலைக்கும்..' லால் சலாம் இசை வெளியீட்டு விழா தேதி!

நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
’அஸ்ஸலாமு அலைக்கும்..' லால் சலாம் இசை வெளியீட்டு விழா தேதி!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், நாயகனான விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இதையும் படிக்க: அயலான் - 2!

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வருகிற ஜன.26 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், நடிகர் ரஜினியின் குட்டி கதையைக் கேட்க தயாராகுங்கள் என்கிற அறிவிப்புடன் விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com