ஓடிடியில் நேரு!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான நேரு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் நேரு!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் இவர் நடித்து இறுதியாக வெளியாக  நேரு திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் நடித்த மலைக்கோட்டை வாலிபன் படமும் நாளை மறுநாள் (ஜன.25) வெளியாக உள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி உலகளவில் ரூ.85 கோடி வசூலித்த நேரு திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com