ஆஸ்கர் விருது: 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர்!

ஆஸ்கர் விருது: 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர்!

ஆஸ்கர் விருதுக்காக 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
Published on

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் ஜப்பானைத் தவிர உலகின் அனைத்து இடங்களிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

தொடர்ந்து, 96-வது ஆஸ்கர் விருதுக்கு இப்படம் தேர்வாகி இறுதிச்சுற்று வரை அதிக பிரிவுகளில் தேர்வானது. தற்போது, விருது பரிந்துரைக்கான இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த தழுவல் கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்பட 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் தேர்வாகியுள்ளது. 

மேலும், கில்லர்ஸ் ஆஃப் பிளவர் மூன் திரைப்படமும் பல பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு முன்னணி வகிக்கிறது.

ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com