நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி, நடித்த அவரின் 50-வது படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
இப்படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.பான் இந்தியப் படமாக இது உருவாகிறது.
இதையும் படிக்க: சார்பட்டா - 2 பணிகள் துவக்கம்! பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், இப்படத்திற்கு ‘தாராவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்கள் அதிகம் உள்ள மும்பை தாராவியை மையமாகக் கொண்ட கதையாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.