ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் பிரித்வி ராஜன் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனான பிரித்வி ராஜன் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்!
இந்த நிலையில் , இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரித்வி, படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தை பாண்டியராஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.