
நடிகை சுனைனா திருமணம் செய்துகொள்ள உள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சுனைனா சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த தகவலை ரசிகர்களுக்குத் தெரிவித்திருந்த நிலையில், அவர் யாரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான சுனைனா (35), மாசிலாமணி, திருத்தணி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானவர். சமீபத்தில் இவரின் நடிப்பில் ரெஜினா திரைப்படம் வெளியானது.
இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாத நிலையில், அடுத்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை குறிக்கும் வகையில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். ஆனால் யாருடன் மோதிரம் மாற்றிக்கொண்டார் என்பது குறீத்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், சுனைனா திருமணம் செய்துகொள்ளவுள்ள நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் துபையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி (40) என்பவரை நிச்சயம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் சுனைனா பதிவிட்டதைப் போன்று இரு கைகளில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை மட்டும் பகிர்ந்துள்ளார்.
கடந்த 5 நாள்களுக்கு முன்னரே இதனை காலித் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் சுனைனா திருமணம் செய்துகொள்ளவுள்ள நபர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நடிகர் மம்மூட்டியை நேர்காணல் செய்திருந்தார் காலித். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதன்மூலம் இந்திய ரசிகர்கள் பலரிடையே காலித் அறியப்பட்டார்.
காலித் தனது குடும்பத்துடன் இந்தியா வந்து நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளிப்படையாக இருவரும் தெரிவிக்காத நிலையில், சுனைனா - காலித் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலித், தன்னுடைய முதல் மனைவியான சலமா முஹம்மது என்பவரை 6 மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.