தங்கலான் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

விரைவில் அற்புதமான டிரைலர் வெளியாகவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தங்கலான் படம் குறித்த புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் டீசரில் நடிகர் விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பின்னணி இசைப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட பதிவில்,

"தங்கலான் பின்னணி இசைப் பணிகள் நிறைவடைந்தது. என்னுடைய சிறப்பான பணியை கொடுத்துள்ளேன். இப்படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு அற்புதமான டிரைலர் உங்கள் மனதில் பதியப் போகிறது. தங்கலானுக்காக இந்திய சினிமா தயாராகவுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் விரைவில் தங்கலான் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com