

பிரபாஸுடன் நடிகை திஷா பதானி `டேட்டிங்’ செய்து வருவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.
பாலிவுட் நடிகை திஷா பதானி சமீபத்தில் வெளியான `கல்கி 2898 ஏ.டி.’ திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படிகோனே உள்பட திரை நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கின்றனர். இந்திய சினிமாவின் புதிய மைல்கல்லாக `கல்கி 2898 ஏ.டி.’ இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகை திஷா பதானி, பிரபாஸுடன் ஒன்றாக `டேட்டிங்’ செய்து வருகிறார் போல? என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஏனெனில், திஷா பதானி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினைப் பகிர்ந்திருந்தார். அந்த படத்தில், திஷா பதானியின் கையில் `பி.டி.’ என்று பச்சை குத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் `பிரபாஸ் மற்றும் திஷா’ என்பதனை சுருக்கமாகவே `பி.டி.’ என்று பச்சை குத்தியிருக்கிறார் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், `பதானி திஷா’ என்ற அவருடைய பெயரையே பச்சை குத்தியிருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் திஷா பதானியின் புகைப்படத்தை பற்றிய பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், திஷா பதானி இது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் திஷா, அவர் பச்சை குத்தியுள்ள விவகாரம் இவ்வளவு பிரபலமாகியது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரே, திஷா பதானி சைபீரிய மாடல் அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிக் உடன் டேட்டிங் செய்ததாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.