எதிர்நீச்சல் நடிகைக்கு பிறந்தநாள்! நேரில் வாழ்த்திய மதுமிதா

எதிர்நீச்சல் தொடரில் நடித்த நடிகை கனிகாவுக்கு அத்தொடரின் நாயகி மதுமிதா நேரில் வாழ்த்து.
கனிகாவுடன் மதுமிதா
கனிகாவுடன் மதுமிதாஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

எதிர்நீச்சல் தொடரில் நடித்த நடிகை கனிகாவுக்கு அத்தொடரின் நாயகி மதுமிதா நேரில் இன்று (ஜூலை 3) வாழ்த்து தெரிவித்தார்.

தனக்காக எப்போதும் துணை நிற்கும் குணத்துக்காகவும், உதவும் மனப்பான்மைக்காகவும் நன்றி எனப் பதிவிட்டு, அவருடன் இருக்கும் படங்களையும் நடிகை மதுமிதா பகிர்ந்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடர் முடிந்த பிறகு கனிகா கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. கடந்த பிறந்த நாள், எதிர்நீச்சல் குழுவுடன் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பிறந்த நாள், அத்தொடரின் நாயகியுடன் கனிகா கொண்டாடியுள்ளார்.

கனிகாவுடன் மதுமிதா
கனிகாவுடன் மதுமிதாஇன்ஸ்டாகிராம்

எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனுக்கு மனைவியாக ஈஸ்வரி பாத்திரத்தில் கனிகா நடித்திருந்தார். இயக்குநர் திருச்செல்வம் இயக்கி பெரும் வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடர், சன் தொலைக்காட்சியில் 744 எபிஸோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பானது.

பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி மட்டுமின்றி, குடும்பத்தில் ஆண்களின் பிற்போக்குத்தனங்களை சுட்டிக்காட்டி எடுக்கப்பட்டு வந்த இந்தத் தொடர் எடுக்கப்பட்டது.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்களிலும் நாயகியாக நடித்துள்ள கனிகா, தமிழில் ஜெனிலியா, சதா, ஸ்ரேயா ரெட்டி போன்ற முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் (டப்பிங்) கொடுத்துள்ளார்.

நடிகை கனிகா
நடிகை கனிகாஇன்ஸ்டாகிராம்

5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கனிகா, எதிர்நீச்சல் தொடரில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் மலையாளத்தில் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு எதிர்நீச்சல் நாயகி மதுமிதா நேரில் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள மதுமிதா பதிவிட்டுள்ளதாவது,

''என் மீதான உங்களின் சமரசமில்லாத ஆதரவுக்கு நறி. உங்கள் நேர்மறை எண்ணங்கள் என்னை வழிநடத்தும் வெளிச்சம். நீங்கள் நீங்களாக இருப்பதற்கும், அனைவருக்காக எந்த சூழலிலும் துணை நிற்பதற்கும் நன்றி. என் பிரச்னைகளுக்காக உங்களை நோக்கி வரும்போதெல்லாம், எனக்காக எப்போதும் துணையா இருப்பதற்கும் நன்றி. இன்று உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். உங்கள் தைரியம் போன்றே உங்கள் நாள் ஒளிமயமாகட்டும். பல நினைவுகளை சேகரிக்க ஒன்றாக பயணிப்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com