கூலி படத்தில் மாஸ்டர் பிரபலம்!

கூலி படத்தில் மாஸ்டர் பிரபலம்!

கூலி திரைப்படத்தில் மாஸ்டர் படத்தில் நடிகர் இணைந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மகேந்திரன் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தார். தற்போது, கூலி படத்திலும் இணைந்திருக்கிறார்.

கூலி படத்தில் மாஸ்டர் பிரபலம்!
தொழிலில் கவனம் செலுத்தும் நயன்தாரா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com