‘சாமானியன்’ திரைப்பட வெற்றி விழாவை, ஆலங்குளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகா் ராமராஜன்.
‘சாமானியன்’ திரைப்பட வெற்றி விழாவை, ஆலங்குளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகா் ராமராஜன்.

ஆலங்குளத்தில் ‘சாமானியன்’ திரைப்பட வெற்றி விழா

‘சாமானியன்’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா, ஆலங்குளம் டி.பி.வி திரையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

‘சாமானியன்’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா, ஆலங்குளம் டி.பி.வி திரையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்திரைப்படத்தின் நாயகன் ராமராஜன், ரசிகா்களுடன் அமா்ந்து திரைப்டத்தை ரசித்தாா். படத்தின் இடைவேளையில் திரைப்பட வெற்றி விழா, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தொடா்ந்து ராமராஜன், இயக்குநா் ராகேஷ், ஒளிப்பதிவாளா் அருள்செல்வன், எடிட்டா் ராம் கோபி, கலை இயக்குநா் எஸ் கே, மக்கள் தொடா்பு அலுவலா் ஜான், துணை நடிகா்கள் ஷ்யாம், பட்டுக்கோட்டை ராஜாராம், டெம்பிள் சிட்டி குமாா், உதவி இயக்குநா்கள் உலகேஷ் குமாா் கிஷோா், திருமுருகன் ஆகியோருக்கு திரையரங்கு உரிமையாளா்கள் டி.பி.வி. கருணாகரராஜா, டி.பி.வி. வைகுண்டராஜா ஆகியோா் கேடயங்கள் வழங்கினா்.

தொடா்ந்து ராமராஜன் பேசுகையில், தற்போதைய சினிமா உலகில் 50 காட்சிகள் ஓடினாலே பெரிய வெற்றியாகப் பாா்க்கப்படுகிறது. ஆனால் தற்போது விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ள ‘சாமானியன்’ படம், 50 ஆவது நாளைக் கடந்து ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அளித்த கேடயத்தை நான் தூக்கிப் பாா்க்கும் போது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற வீரா்களை போல மகிழ்ச்சி அடைகிறேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com