நம் சனமும் தலை நிமிரும்.. தங்கலான் டிரைலர்!

நம் சனமும் தலை நிமிரும்.. தங்கலான் டிரைலர்!

Published on

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது. ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் படத்தின் தூணாக இருந்தார்.

தொடர்ந்து, தங்கலான் படத்தில் இணைந்தார். கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்ததால் பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது. மேலும், ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. மீண்டும் இறுதிக்கட்ட பணிகளின் தாமதத்தால் படக்குழு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நம் சனமும் தலை நிமிரும்.. தங்கலான் டிரைலர்!
மலர் டீச்சராக நடித்திருக்க வேண்டிய நடிகை இவரா?

இந்த நிலையில், இன்று தங்கலான் டிரைலர் வெளியாகியுள்ளது. விஎஃப்எக்ஸ், ஆங்கிலேயர்களின் காலகட்டம் போன்ற காட்சிகளுக்கு ஜி.வி.பிரகாஷின் இசை பலம் அளித்துள்ளன. நடிகர் விக்ரமின் தோற்றமும் ஆக்சன் காட்சிகளும் படத்தின் மீதான ஆவலை அதிகரிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com