படத் தலைப்புகளை கன்னட மொழியின் பாரம்பரியத்தில்தான் வைப்பேன்: இயக்குநர் ஹேமந்த் ராவ்

இயக்குநர் ஹேமந்த் ராவ் தனது படத்தின் தலைப்புகள் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவராஜ் குமார் உடன் இயக்குநர் ஹேமந்த் ராவ்.
நடிகர் சிவராஜ் குமார் உடன் இயக்குநர் ஹேமந்த் ராவ்.
Published on
Updated on
1 min read

சமீபத்தில் கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ- சைடு ஏ, சைடு பி என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியான படம் நல்ல வரவேற்பினை பெற்றன. தொடர்ந்து அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது.

ஹிந்தியில் ஹிட் அடித்த அந்தாதுன் படத்துக்கு திரைக்கதை எழுதியவரும் இவர்தான். இதற்காக தேசிய விருதுபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். இதன் பெயர் ‘பைரவான கொனே பாட’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைரவா படம் கன்னடம் உள்பட தமிழ் தெலுங்கில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சிவராஜ் குமார் உடன் இயக்குநர் ஹேமந்த் ராவ்.
இலங்கையில் தொடங்கியது விஜய் தேவரகொண்டா 12 படப்பிடிப்பு!
சிவராஜ் குமார் பட போஸ்டர்.
சிவராஜ் குமார் பட போஸ்டர்.

ஜெயிலர் படத்தில் நடித்ததின்மூலம் சிவராஜ் குமாருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் கேப்டன் மில்லரிலும் நடித்திருந்தார்.

தனது படத்தின் பெயர்கள் மூலமும் கவனம் பெற்றவர் ஹேமந்த் இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் ஹேமந்த் ராவ் பேசியதாவது:

இந்தப் படம் 12ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடைபெறுவதாக உருவாக்கப்பட உள்ளது. கற்பனையான கதையாக இருந்தாலும் இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளோம். முதல் பார்வை போஸ்டருக்காக 400 அடி மலை ஏறினார்.

நடிகர் சிவராஜ் குமார் உடன் இயக்குநர் ஹேமந்த் ராவ்.
3 பாகமாக உருவாகும் வேள்பாரி: ஷங்கர் விளக்கம்!

பான் இந்திய டிரெண்டிங்கில் தற்போது பெயர்கள் வைக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால், கதைகள் என்பது அடையாளம் சார்ந்தது. அது எனது மக்களையும் மண்ணையும் மொழியையும் சார்ந்தது. குழந்தைக்கு பெற்றோர்கள் பெயர் வைக்கும்போது லட்சம் முறை யோசிப்பதுப்போல நான் நேசத்துடன் சிந்தித்து வைக்கிறேன். மக்கள் மனதில் நிற்கும்படி தலைப்பு வைக்க முயற்சிக்கிறேன் அதை மக்களும் கவனிப்பது மகிழ்ச்சி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com