
இந்திய சினிமாவும் உலகளவில் வணிக ரீதியாக பெரிய அங்கீகாரங்களைப் பெற்று வருகிறது. முக்கியமாக, மேக்கிங்கிலும் சர்வதேச தரத்தை எட்டியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
முதன் முதலில் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படமே பல மொழிகளில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்று இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இருந்தது. இப்படம் உலகளவில் ரூ. 2020 கோடியை வசூலித்து திரையுலகினரிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி - 2 திரைப்படங்கள் இணைந்து 2300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தன. அதில், பாகுபலி - 2 மட்டும் ரூ.1810 கோடியை வசூலித்தது.
அடுத்ததாக, யஷ் நடித்த கேஜிஎஃப் 2 உலகளவில் ரூ.1250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ரூ.1380 கோடியையும் நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் ரூ.1050 கோடியும் வசூலித்தன. அதன்பின், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
தற்போது, பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படமும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இதுவரை, இந்திய சினிமாவில் 6 திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன. இதில், பிரபாஸ் மற்றும் ஷாருக்கான் தலா 2 படங்களில் நாயகனாக இருந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.