

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தையின் பெயரை எக்ஸ் தளத்தில் விடியோ மூலம் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார்.
தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் என்கிற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.
தற்போது குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்வில் விடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, மூன்றாவது குழந்தையின் பெயர் பவன் சிவகார்த்திகேயன் எனத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அந்த காணொலியை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.