
நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா வசூலில் திணறி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்காக சூர்யாவுக்கும் சுதா கொங்காராவுக்கும் தேசிய விருதுகளும் கிடைத்தன.
தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கினார். சர்ஃபிரா எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்தார்.
சர்ஃபிரா, இந்தியன் - 2 திரைப்படத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியானது. சூரரைப் போற்று அளவிற்கு இல்லையென்றாலும் ஹிந்தியில் நல்ல விமர்சங்களையே பெற்று வருகிறது.
படத்தின் கதைக்காவே இப்படமும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் ரூ.12 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ரூ.80 கோடியில் உருவான சர்ஃபிரா வசூலில் திணறி வருகிறது. ஹிந்தியில் கல்கி திரைப்படமே ஆதிக்கம் செலுத்தி வருவதால், சர்ஃபிரா வசூல் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது.
மேலும், கடந்த 3 ஆண்டுகளாக அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த எந்தப் படங்கள் வசூலைக் குவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.