
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் - 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.
சர்தார் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு, ஜூலை 15ஆம் நாள் இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெறுமென தெரிவித்திருந்தனர்.
தற்போது, சென்னையில் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில், நடிகர் கார்த்தி கலந்துகொண்டதாகவும் தகவல்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதைப் படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.