ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிப்பாதி
ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிப்பாதி

மீம்ஸ் உருவாக்குபவர்கள் கலைஞர்கள்..! ஹிந்தி நடிகர் புகழாரம்!

பிரபல ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிப்பாதி மீம்ஸ் கிரேயட்டர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
Published on

ஹிந்தி திரைப்படங்களில் 2003இல் இருந்து நடித்து வருகிறார் நடிகர் பங்கஜ் திரிப்பாதி. அனுராக் காஷ்யப் படங்களில் இவரது கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானது.

2 தேசிய விருதுகள் உள்பட பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். இதுவரை சுமார் 67 படங்களில் நடித்துள்ளார். பல இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஸ்டீரி2 படம் வெளியாகவுள்ளது. நிரேன் பட இதனை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் அபிஷேக் பானர்ஜி நடித்துள்ளார்கள். 2018இல் வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிப்பாதி
ஹிப்ஹாப் ஆதியின் 8ஆவது படம்! முதல் பார்வை போஸ்டர்!

இந்தப் படம் ஆக.15ஆம் நாள் வெளியாக உள்ளது. மிர்ஜாபூர், கேங்ச் ஆஃப் வசிப்பூர் ஆகிய படங்களில் பங்கஜ் திரிப்பாதியின் மீம்ஸ்கள் மிகவும் பிரபலம்.

பங்கஜ் திரிப்பாதி பிரபல மீம் டெம்ப்ளேட்
பங்கஜ் திரிப்பாதி பிரபல மீம் டெம்ப்ளேட்படம்: கேக்ஸ் ஆஃப் வசிப்பூர் / ஸ்கூப்வூப்.காம்

இது குறித்து பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கஜ் திரிப்பாதி பேசியதாவது:

தொடக்கத்தில் நான் மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலையில்லாமல் இணையத்தில் பொழுதைக் கழிப்பவர்களாக நினைத்தேன். ஆனால், மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகவும் படைப்புத்திறன் உள்ள ஆள்கள் என தற்போது உணர்கிறேன் என்றார்.

ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிப்பாதி
பிரியங்கா சோப்ரா பிறந்த நாளுக்கு கணவர் நிக் ஜோனாஸ் கூறியது என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com