
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் 2002இல் அறிமுகமானார். தற்போது தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
பாலிவுட்,ஹாலிவுட் என நடிப்பில் தனுஷ் கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநராகவும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார்.
தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். ராயன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ராயன் படத்துக்குப் பிறகு தனுஷ் தெலுங்கில் குபேரன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இளையராஜா பயோப்பிக்கில் நடிக்கிறார்.
இதற்கடுத்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தினை இயக்கிவருகிறார். இது பிரேமலு மாதிரியான படமென எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கிய தனுஷ் ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
நடிகர் தனுஷ் பல கதைகளை எழுதி வைத்துள்ளார். அடுத்து புதிய படம் ஒன்றில் கதை எழுதியுள்ள தனுஷ், அதை தானே இயக்கி நடிக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரை 3 படங்களை இயக்கியுள்ள தனுஷ் 4ஆவது படத்து தயாராக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.