3 நாள்களில் 350 லட்சம்...! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஞ்சலி!

நடிகை அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு இணையத் தொடர் 3 நாளில் 350 லட்சம் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளன.
நடிகை அஞ்சலி
நடிகை அஞ்சலி
Published on
Updated on
1 min read

கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம், இறைவி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகை அஞ்சலி.

எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களில் முழுமையான நடிப்பை வழங்கி வருகிறார்.

தமிழில் கதைநாயகியாக ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

நடிகை அஞ்சலி
தக் லைஃப் டப்பிங் பணிகளை தொடங்கிய சிம்பு!

தற்போது, தன் 50-வது படமான ‘ஈகை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார்.

39 வயதாகும் அஞ்சலி பக்‌ஷிகரனா என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார். இது ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 19ஆம் தேதி வெளியாகியுள்ளது.

பக்‌ஷிகரனா போஸ்டர்.
பக்‌ஷிகரனா போஸ்டர்.

இந்தத் தொடரில் அஞ்சலி அந்தரங்க காட்சிகளில் நடித்துள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் இந்தத் தொடர் 3 நாளில் 35 மில்லியன் (350 லட்சம் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அஞ்சலி கூறியதாவது:

அன்பு ரசிகர்களே, என்னுடைய புதிய தெலுங்கு இணையத்தொடரான பக்‌ஷிகரனா ஜீ5 ஓடிடியில் 3 நாளில் 35 மில்லியன் (350 லட்சம் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளன.

புஷ்பாவாக நடிப்பது சவாலானது. எனக்கு அந்த சவால் பிடித்திருந்தது. எங்களது கதையை நீங்கள் எடுத்துகொண்ட விதம் பிடித்திருக்கிறது.

நீங்கள் எனக்கு தரும் ஆதரவும் உற்சாகமும் என்னை இன்னும் புதிய புதிய கதாபாத்திரங்களில் நடிக்க தூண்டுகிறது. அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com