விசில்.. நடனம்.. திரையரங்கில் கலக்கும் வாட்டர் பாக்கெட் பாடல்!

விசில்.. நடனம்.. திரையரங்கில் கலக்கும் வாட்டர் பாக்கெட் பாடல்!
Published on
Updated on
1 min read

ராயன் திரைப்படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடல் திரையரங்கில் பெரிதாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அதேநேரம், படத்தைப் பார்க்கும் ஆர்வதிலும் பல ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

வாட்டர் பாக்கெட் பாடலில்...
வாட்டர் பாக்கெட் பாடலில்...

முன்னதாக, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, வாட்டர் பாக்கெட் என்கிற கானா பாடல், வரிகளுக்காகவும் இசைக்காகவும் ஈர்ப்பைக் கொடுத்தது.

இந்த நிலையில், இப்பாடலைத் திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் விசிலடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விசில்.. நடனம்.. திரையரங்கில் கலக்கும் வாட்டர் பாக்கெட் பாடல்!
ராயன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர்கள் சந்தீப் கிஷனுக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையான காதல் காட்சிக்காக இப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதனை, கானா காதர் என்பவர் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com