
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனால், வசூலில் வெற்றி பெறும் என்றே தெரிகிறது.
அதேநேரம், தனுஷின் - 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு குபேரா படக்குழு புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.