தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிய திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜூன் 2024, 10:45 am

DIN

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஸ்வதேஷ் இயக்கத்தில் யோகிபாபு, ஓவியா நடித்த பூமர் அங்கிள் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ஆஹா மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அக்‌ஷய்குமார் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படமான ’படே மியான் சோடே மியான்’ நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா பிரதான பாத்திரத்தில் நடித்த '105 மினிட்ஸ்' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரணவ் மோகன்லால், வினீத் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.