மிர்சாபூர் சீசன் - 3 வெளியீட்டுத் தேதி!

மிர்சாபூர் சீசன் - 3 வெளியீட்டுத் தேதி!

மிர்சாபூர் இணையத் தொடரின் மூன்றாவது சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 2018-ல் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்ற இணையத் தொடர் மிர்சாபூர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி கலீம்மின் (பங்கஜ் திரிபாதி) தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் சகோதரர்களான நாயகர்கள், ரவுடிகளாக மாறி கலீமை பழிவாங்கும் கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது.

முதல் இரண்டு சீசன்களில் மிர்சாபூரில் இருக்கும் துப்பாக்கி கலாச்சாரம், ரவுடிகளின் ஆதிக்கம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மூன்றாவது சீசனில் யாருக்கு மிர்சாபூர்? என்கிற அதிகாரப் போட்டி கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் (இருவரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றனர்) ஆகியோரின் நடிப்பால் இத்தொடர் பிரபலமடைந்தது.

இந்த நிலையில், இயக்குநர்கள் கரன் அன்ஷுமன், கும்ரித் சிங், மிகிர் தேசாய் இயக்கத்தில் உருவான இத்தொடரின் மூன்றாவது சீசன் வருகிற ஜூலை 5 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிர்சாபூர் சீசன் - 3 வெளியீட்டுத் தேதி!
காதலரைக் கரம்பிடிக்கும் சோனாக்‌ஷி சின்ஹா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com