நிறைவுற்ற தருணத்தில் எதிர்நீச்சல் தொடர் குழு!

பாராட்டு விழாவில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் தொடர் குழு.
நிறைவுற்ற தருணத்தில் எதிர்நீச்சல் தொடர் குழு!
Updated on
1 min read

சன் தொலைக்காட்சியில் கடந்த 2022 பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் ஜூன் 8 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது.

இத்தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் அனைவரும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றனர்.

மதுமிதா, ஹரிப்பிரியா, சத்யா தேவராஜன், பிரியதர்ஷினி ஆகியோர் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் எதிர்நீச்சல் தொடர் உடனான நெருக்கத்தையும், சக கலைஞர்களை பிரிவதால் ஏற்படும் சோகத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

நிறைவுற்ற தருணத்தில் எதிர்நீச்சல் தொடர் குழு!
எதிர்நீச்சல் தொடர் நிறைவு: டிஆர்பியில் கலக்கும் சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இத்தொடரின் இயக்குநர் திருச்செல்வம் மகளின் திருமணத்தில் எதிர்நீச்சல் தொடரின் மொத்த குழுவும் கலந்துகொண்டனர்.

எதிர்நீச்சல் தொடர் 750 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பானதை கொண்டாடும் விதமாக இத்தொடரின் நடித்த நடிகர், நடிகைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் இயக்குநர் திருச்செல்வம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நிறைவாக ஒரு தருணம்' என்று பதிவிட்டு பாராட்டு விழாவில் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை மதுமிதா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com