பவன் கல்யாண் பதவியேற்பு விழாவில் லாவண்யா திரிப்பாதி கலந்துகொள்ளாதது ஏன்?
தெலுங்கில் 2014இல் முகுந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் வருண் தேஜ். நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனும் ஆவார் வருண் தேஜ். தெலுங்கில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார். சாய் பல்லவியுடன் நடித்த பிடா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.
தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிப்பாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களை நடித்துள்ளார். 2017இல் மிஸ்டர் படத்தில் நடித்தபோதே இருவருக்கு காதல் பூத்ததாக தகவல்கள் கசிந்தது. 2023 நவம்பரில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையில் ஜனசேனை மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தனர். இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.
வருண் தேஜ்ஜின் சித்தப்பாவும் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் பதவியேற்பு விழாவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். லாவண்யா த்ரிப்பாதி கலந்து கொள்ளாதது கேள்வி எழுப்பப்பட்டது.
பின்னர் இது குறித்து லாவண்யா இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்தார். தனக்கு காலில் ஏற்பட்டுள்ள காயத்தினை புகைப்படம் எடுத்து ஸ்டோரி வைத்திருந்தார். மேலும் பவன் கல்யாண் கட்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.