கார்த்திக் ஆர்யன்
கார்த்திக் ஆர்யன் படம்: இன்ஸ்டா / கார்த்திக் ஆர்யன்

18 கிலோ எடையைக் குறைத்த ஹிந்தி நடிகர்! வியக்கும் விடாமுயற்சி!

பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் சந்து சாம்பியன் படத்துக்காக 18 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளது மக்களிடையே பாராட்டினைப் பெற்றுள்ளது.
Published on

கார்த்திக் ஆர்யன் 2011 முதல் ஹிந்தி சினிமாக்களில் நடித்து வருகிறார். தற்போது சந்து சாம்பியன் எனும் பயோப்பிக்கில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் நேற்று (ஜூன் 14) வெளியானது.

இந்தியாவின் முதல் பாரா ஒலிம்பிக் தங்கம் வென்ற முரளிகாந்த் பெட்கர் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன் நடித்துள்ளார். இந்தப் படத்தினை என்.ஜி,இ., கபீர் கான் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார்.

கார்த்திக் ஆர்யன்
100ஆவது நாளில் சைத்தான்!

ஜூன் 5இல் இந்தப் படம் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்காக 90 கிலோவிலிருந்து 72 கிலோ வரை எந்த ஒரு ஸ்டீராய்ட் மருந்தும் உபயோகிக்காமல் உடல் எடையை குறைத்துள்ளார்.

இது குறித்து உடற்பயிற்சி நிபுணர் திரிதேவ் கூறியதாவது:

இந்தப் படத்தில் கார்த்திக் ஆர்யன் பாக்ஸராக நடிக்கிறார். இதில் அவர் பல பாக்ஸர்களுடன் சண்டையிட உள்ளதால் வேகம், பலம், வேகமான அசைவுகள் இருக்க வேண்டும். அதனால் இவரை இதற்கெல்லாம் தயார்படுத்தினேன். முதன்முறையாக ஷர்ட் இல்லாமல் நடிக்கும் கார்திக் ஆர்யனுக்கு ஆரம்பத்தில் 39 சதவிகிதம் கொழுப்பு இருந்தது. 18 கிலோ எந்தவித ஸ்டீராய்ட் மருந்தும் உபயோகிக்காமல் குறைத்தார். இறுதியில் 7 சதவிகித கொழுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.

கார்த்திக் மிகவும் ஆர்வமாக இருந்தார். நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். அவர் ஸ்கிப்பிங்கில் விருப்பமில்லாதவர் தற்போது 14-15 வகையிலான ஸ்கிப்பிங் செய்ய கற்றுக்கொண்டுள்ளார். ஒரு புஷ் அப் கூட எடுக்க முடியாதவர் தற்போது 50-60 கிலோ எடையை வைத்து புஷ்-அப் எடுக்கிறார்.

கார்த்திக் ஆர்யன்
இந்தக் கவர்ச்சி போதுமா? டாப்ஸியின் கிண்டல்!

நவம்பரில் அவரது பிறந்தநாள் வந்தது. அதற்காக நண்பர்களது கொண்டாட்டத்தில் கேக் கூட சாப்பிடவில்லை. எனது 17 வருட அனுபவத்தில் இதுமாதிரி அர்ப்பணிப்பு உள்ளவரை நான் பார்த்ததே இல்லை என்றார்.

முதல் நாளில் சந்து சாம்பியன் ரூ.4.75கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com