அருண்ராஜா காமராஜ் - விஷ்ணு விஷால் பட அப்டேட்!
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான கட்டாகுஸ்தி வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. லால் சலாம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
தற்போது, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், விஷ்ணு விஷால் தன் எக்ஸ் பக்கத்தில் அருண்ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துகள் அருண்ராஜா காமராஜ். நம் படத்தை துவங்கும் வரை காத்திருக்க முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘லேபிள்’ தொடர் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

