
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாரான இப்படத்தின் திரைக்கதை உருவாக்கமும் நடிகர்களின் நடிப்பும் பேசப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத் தகவல்.
இந்த நிலையில், படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் மகாராஜா படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ஒவ்வொரு படத்தின் கதை கேட்கும்போது எப்படி இது சாத்தியமாகும் என்கிற கேள்வி இருக்கும். நடித்து முடித்ததும் எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்பதும் தெரியாது. மகாராஜா கதையைக் கேட்கும்போதும் பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. நான் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால், இனிமேல் விஜய் சேதுபதியின் பேனரை வைத்தால் திரைப்படம் ஓடவா போகிறது? என எவரோ சொன்னதாக என்னிடம் சொன்னார்கள். இது போன்ற நிறைய கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக மகாராஜாவில் நடிக்கவில்லை. ஆனால், இது பதிலாக அமைந்ததில் இயக்குநர் நித்திலனுக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி சொல்கிறேன்." எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.