

கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற சின்னச் சின்ன கண்கள் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் இடம்பெற்ற ‘சின்னச் சின்ன கண்கள்’ பாடலை வெளியிட்டனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். பெண் குரலுக்கு மறைந்த பாடகி பவதாரிணியின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியுள்ளனர்.
நேற்று (ஜூன் 22) வெளியான இப்பாடல் இதுவரை 43 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளதுடன் 18 ஆயிரத்தும் மேற்பட்ட பின்னூட்டங்களையும் பெற்றுள்ளது. பாடலின் வரிகளும் விஜய், பவதாரணியின் குரல்களும் கவர்ந்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.