நடிகை மதுமிதா - இயக்குநர் திருச்செல்வம்
நடிகை மதுமிதா - இயக்குநர் திருச்செல்வம்

எதிர்நீச்சல் -2 எப்போது? சீரியல் முடிந்த பிறகு திருச்செல்வம் வெளியிட்ட முதல் பதிவு!

எதிர்நீச்சல் தொடர் முடிந்த பிறகு இயக்குநர் திருச்செல்வம் முதல்முறையாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Published on

எதிர்நீச்சல் தொடர் முடிந்த பிறகு இயக்குநர் திருச்செல்வம் முதல்முறையாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பயணங்களும் மனிதர்கள் சந்திப்புகளும் எப்பொழுதும் நம்மை புதுப்பிக்கும் எனப் பதிவிட்டு பயணம் மேற்கொண்டுள்ள புதிய படத்தைப் பகிர்ந்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் ஜூன் 8ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 2022 பிப்ரவரி முதல் ஒளிபரப்பான எதிர்நீச்சல் 744 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது.

எதிர்நீச்சல் தொடரில் பிற்போக்குத்தனம் மிகுந்த குடும்பத்து ஆண்கள் மனம் திருந்தி மனைவிகளின் கனவுகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற விதத்தில் தொடர் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்மறையான கிளைமேக்ஸ் உடன் எதிர்நீச்சல் முடிந்தது.

நடிகை மதுமிதா - இயக்குநர் திருச்செல்வம்
நடனப் பள்ளி தொடங்கிய எதிர்நீச்சல் நடிகை!
இயக்குநர் திருச்செல்வம்
இயக்குநர் திருச்செல்வம்

ஆதி குணசேகரனை சிறைக்கு அனுப்பிவிட்டு, இதுபோன்ற நிறைய குணசேகரன்களை வாழ்க்கையில் சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறி, அப்பத்தா, தனது வீட்டு மருமகள்களை பணிக்கு அனுப்பி வைப்பதைப்போன்று எதிர்நீச்சல் கடைசிக்காட்சி முடிந்திருக்கும்.

அவசர அவசரமாக தொடர் முடிக்கப்பட்டதைப்போன்று இருந்தது. மேலும், எதிர்நீச்சல் தொடர் முடியும் என்று யாரும் எதிர்பாராததால், எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எதிர்நீச்சல் இறுதிக்காட்சி
எதிர்நீச்சல் இறுதிக்காட்சி

பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அத்தொடரின் நடிகை, நடிகர்களிடம் ரசிகர்கள் எதிர்நீச்சல் -2 குறித்து கேட்டறிகின்றனர். இந்நிலையில், தற்போது எதிர்நீச்சல் தொடர் முடிந்து முதல்முறையாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் திருச்செல்வத்திடமும் எதிர்நீச்சல் -2 குறித்து ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்டுகள்
ரசிகர்களின் கமெண்டுகள்

எதிர்நீச்சல் தொடர் முடிந்த பிறகு இயக்குநர் திருச்செல்வம் தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அதோடு தற்போது பயணம் செய்வதையும் வாடிக்கையாக்கியுள்ளார். அந்தவகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், பயணங்களும் மனிதர்கள் சந்திப்புகளும் எப்பொழுதும் நம்மை புதுப்பிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் எதிர்நீச்சல் -2 குறித்து ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். சக்தி - ஜனனி பாத்திரங்களை மட்டுமாவது வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com