
இந்தியாவில் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் உச்ச நட்சத்திரங்களின் படம் என்றால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். முதல்நாளில் அதன் வணிகம் பிரமிக்க வைக்கும்.
இந்திய அளவில் வெளியான திரைப்படங்களில் முதல்நாள் வசூலில் (உலகம் முழுவதும் வசூலித்த கணக்கின் அடிப்படையில்) ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம்தான் முதல் இடத்தில் இருக்கிறது. ரூ.223 கோடி வசூலினை இதுவரை எந்த இந்திய திரைப்படங்களும் முறியடிக்கவில்லை.
இந்தப் பட்டியலில் பிரபாஸ் நடிப்பில் நேற்று (ஜூன் 27) வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஒரேயொரு தமிழ்ப்படமாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் 10ஆவது இடத்தில் அனிமல் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.
முதல்நாளில் அதிகமாக வசூலித்த இந்திய திரைப்படங்களின் வரிசை:
ஆர்ஆர்ஆர் - ரூ. 223 கோடி
பாகுபலி 2 - ரூ. 214 கோடி
கல்கி 2898 ஏடி - ரூ. 191 கோடி
சலார் - ரூ. 165 கோடி
கேஜிஎஃப் 2- 162 கோடி
லியோ - ரூ.142 கோடி
ஆதிபுரூஷ் - ரூ.136 கோடி
ஜவான் - ரூ.129 கோடி
சாஹோ - ரூ. 125 கோடி
அனிமல் - ரூ. 115 கோடி